இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சதியில் தமிழ் டயஸ்போரா?

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சதிகளில் தமிழ் டயஸ்போரா ஈடுபட்டுள்ளதாக ஆதாரபூர்வமான தகவல்கள் வௌியாகியுள்ளது.

கிழக்கில் இஸ்லாமியருக்கும் தமிழ் சகோதரர்களுக்கும் இடையில் பிணக்குகளை உண்டாக்க தமிழ் “டயஸ்போரா”விடமிருந்து பணம் அனுப்பப்பட்டதாகவும், அந்த கொடுக்கல் வாங்கள்கள் சம்பந்தமான ஆவணங்களை தான் ரகசிய பொலிசாருக்கு கொடுத்துள்ளதாகவும் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கிய “நாமல் குமார”  ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களை உடைப்பது, இஸ்லாமிய அரசியல் தலைமைகளை கொல்வது, அதன் பெயரில் “கரில்லா” படையணி ஒன்றை அமைத்து நாட்டில் குழப்பம் விளைவிப்பது என பல பயங்கர‌ திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் இவர் கூறுகின்றார்.

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் மீது சாய்ந்தமருது பிரதேசத்தில் தாக்குதல் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திலும் தமிழ் டயஸ்போராக்களின் பணம் மற்றும் பின்புலம் தொடர்புபட்டுள்ளமையும் தற்போது வௌிவந்துள்ளது.

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube