கோட்டாவின் கனவுக்கு சாவுமணி அடிக்கத்துடிக்கும் அமெரிக்கா

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொள்ளும் நோக்குடன் கடந்த 07ம் திகதி கோட்டாபய அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருந்தார்.

அதன்பின்னர் குடியுரிமையை நீக்கிக் கொள்வது தொடர்பில் அவர் இதுவரை இரண்டு தடவைகள் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார், எனினும் குறித்த இரண்டு நேர்காணல்களிலும் அவர் சித்தியடையத் தவறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனினும் குடியுரிமை நீக்கம் தொடர்பாக அவர் தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பாக எந்தவொரு சாதகமான பதிலையும் இதுவரை வழங்கவில்லை.

அதே நேரம் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பான கோட்டாபயவின்  விண்ணப்பத்தில் உள்ள விடயங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள  ஆராய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் மிக முக்கியமான அதிகாரிகள் நான்குபேர் இலங்கை வந்துள்ளனர்.

குறித்த அதிகாரிகளின் அறிக்கை கிடைத்த பின்னரே குடியுரிமை நீக்கம் தொடர்பான கோட்டாவின் விண்ணப்பம் குறித்து ராஜாங்கத் திணைக்களம் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதால் தற்போதைக்கு திடீர் தேர்தலொன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் கோட்டாபய அதில் போட்டியிட முடியாத நிலையை எதிர்கொள்ளக் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube

One thought on “கோட்டாவின் கனவுக்கு சாவுமணி அடிக்கத்துடிக்கும் அமெரிக்கா”

Comments are closed.