ஜனாதிபதி ஆணைக்குழுவில் கோட்டாபய வாக்குமூலம்

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

மிஹின்லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய அவர் இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துக் கொண்டுள்ளார்.

அத்துடன், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் மிஹின்லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

 

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube