ஞானசாரவுக்கு ஒருவருட சிறைத்தண்டனை?

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரருக்கு எதிராக பொலிசார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர்  ஞானசார தேரரை ஹோமாகம நீதிமன்றம் கடந்த மே மாதம் 14ம் திகதி குற்றவாளியாக தீர்ப்பளித்திருந்தது.

அவருக்கு எதிரான தண்டனை இன்றைய தினம் வழங்கப்படும் என்றும் கடந்த மாதம் நீதிபதியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை பெருந்தொகையான ஆதரவாளர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் சகிதம் ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த ஹோமாகம நீதிமன்றம், அதனை ஆறு மாதங்களில் கழிந்து போகும் வகையில் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக அவருக்கு 3 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube