திருகோணமலையில் இலேசான நிலநடுக்கம்

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றிரவு இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு சுமார் 12.35 அளவில் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மூதூரில் ஆரம்பத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் பின்னர் தோப்பூர், குச்சவௌி என்று ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பிரதேசங்களில் சிறிது நேர இடைவௌியில் உணரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் சில இடங்களில் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டும் வௌியில் ஓடிவந்துள்ளனர்.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்களுக்கோ சொத்துக்களுக்கோ எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube