நட்சத்திர தளபதி ரொஹான் தளுவத்தை மரணம்

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

ராணுவத்தின் முன்னாள் நட்சத்திரத் தளபதிகளில் ஒருவரான ரொஹான் தளுவத்தை இன்று உயிரிழந்துள்ளார்.

1941ம் ஆண்டு அம்பலாங்கொடையில் பிறந்த அவர் இறக்கும் போது 77 வயதைக் கடந்திருந்தார்.

அம்பலாங்கொடை தர்மபால கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரிய என்பவற்றின் பழைய மாணவரான தளுவத்தை, 1961ம் ஆண்டு ராணுவத்தின் கடேற் அதிகாரியாகப் பணியில் இணைந்து கொண்ட அவர் ராணுவத்தின் முக்கிய போர் நடவடிக்கைகளில் பலவற்றில் நேரடியாக பங்கு கொண்டிருந்தார்.

அத்துடன் 1995ம் ஆண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை விடுவிப்பதற்கான சூரியக் கதிர் (ரிவிரெச) போர் நடவடிக்கையின் கட்டளைத் தளபதியாகவும் செயற்பட்டிருந்தார்.

பின்னர் 1996ம் ஆண்டு ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட அவர் 1998ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வின் பின்னர் அவர் பிரேசில் நாட்டுக்கான தூதுவர், தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் தலைவர் , கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் வேந்தர் ஆகிய பதவிகளை வகித்திருந்தார்.

இவரது ராணுவ சேவைகளை மெச்சும் வகையில் வீரவிக்கிரம, ரணவிக்கிரம, ரணசூர, விசிஸ்ட சேவா மற்றும் உத்தம சேவா பதக்கங்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

 

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube