பஸ் கட்டணம் நாளை நள்ளிரவு மீண்டும் அதிகரிப்பு

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail
நாளை நள்ளிரவு தொடக்கம் பஸ் கட்டணம் 4% வீதத்தினால் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப கிலோமீட்டருக்கு அதிகரிக்கும் மேலதிக செலவை பயணிகளை மூன்று வகையினராக பிரித்து கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் உச்சபட்சமாக 4 வீதம் வரை பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் பத்து வீதம் வரை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தனியார் பஸ் போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்
அரசாங்கத்தின் தரப்பு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சங்கத்தின் பிரதிநிதிகள் மத்தியில் நீண்ட வாதப ்பிரதிவாதங்களின் பின்னரே கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளை நள்ளிரவு தொடக்கம் புதிய கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் ஆரம்ப கட்டணம் 12 ரூபாயில் மாற்றங்கள் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube