பேஸ்புக்கிலிருந்து ஐம்பது மில்லியன் பயனர்களின் விபரங்கள் திருட்டு

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

ஐம்பது மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வௌியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் பயனர்களின் தகவல் திருட்டு அண்மைக்காலமாக அடிக்கடி நடைபெற்று வருகின்றது. ஒருபடி மேலே சென்று அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் ​போது பேஸ்புக் நிறுவனமே தனது பயனர்களின் விபரங்களை பணத்துக்காக விற்பனை செய்த கேவலம் வௌிச்சத்துக்கு வந்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு பாரிய தகவல் திருட்டு நடந்திருப்பதாக பீ.பீ.சி ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகள் இந்த சதியின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வௌ்ளிக்கிழமை பேஸ்புக் கணக்குகளில் பாஸ்வர்ட் ரீசெட் செய்து உள்நுழைந்த கணக்குகளின் விபரங்களே பெருமளவில் திருடப்பட்டுள்ளமை இதன் முக்கிய விடயமாகும்.

பேஸ்புக் நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை இனங்கண்டு அதன் மூலம் உள்ளே நுழைந்து ஒவ்வொரு கணக்கிலும் உள்ள Access Token களைத் திருடியுள்ளது. Access Token என்பது ஒரு Digital Key போன்றது. இதனை உபயோகித்து உங்களது பேஸ்புக் கணக்குகளில் உள்ளே நுளைந்து சில சதிகளைச் செய்ய முடியும்.

உங்கள் பேஸ்புக் கணக்கை குறைந்த பட்ச பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான சில விடயங்கள் கீழே தரப்படுகின்றது

ChangeYourPassword

பாதிக்கப்பட்ட பேஸ்புக் கணக்குகளிலும் உள்ள அனைத்து Access Tokenகளை மாற்றப்பட்டு விட்டதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அவ்வாறான நிலையில் Password ஐ மாற்றத் தேவையில்லை என்கின்றார்கள். ஆனாலும் நமது பாதுகாப்பிற்காக Password ஐ மாற்றி விடுவது நல்லது. இன்னொரு தகவல் திருட்டிலிருந்து அது நமக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை அளிக்கும்.

DeviceAudit

எந்தெந்த கருவிகள் மூலம்/எந்தெந்த இடங்களில் இருந்து உங்களது பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு பரிசோதித்துப் பாருங்கள். பேஸ்புக்கில் Security and Login என்ற பக்கத்தில் Where You’re Logged In என்ற லின்க்கை கிளிக் செய்தால், யார் யார் எந்தெந்த இடங்களில் இருந்து எந்தெந்த device இன் மூலம் உங்களது கணக்குகளில் உள்நுழைந்துள்ளார்கள் என்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்படும். . சந்தேகத்திற்கிடமான இடமோ அல்லது Device இருந்தால் அதனை உங்களுக்கு நீக்குவதுடன் அவர்கள் மீண்டும் முயற்சிக்காதவாறு புளொக் செய்து விடுவதே பாதுகாப்பானது.

TwoFactorAuthentication

நீங்கள் இதுவரை Two-Factor Authentication என்கின்ற மேலதிக பாதுகாப்பு முறையினை activate செய்யவில்லையாயின் அதனை active செய்து விடுங்கள். இதன் மூலம் யாராவது இனந்தெரியாத நபர் ஒருவர் ஒரு புதிய device இல் இருந்து உங்களது பேஸ்புக் கணக்கில் நுழைய முற்பட்டால் உடனே ஒரு 6 இலக்க code ஒன்றை கேட்கும். அந்த 6 இலக்க code உங்களது கையடக்கத் தொலைபேசிக்கு sms செய்யப்படும். அது நீங்களாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் அந்த code ஐச் செலுத்தி உள்ளே நுழையலாம்.

கடைசியாக சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். இணைய உலகம் ஒருபோதும் உங்கள் அந்தரங்க தகவல்களைச் சேமித்து வைக்கப் பாதுகாப்பான இடம் கிடையாது. அது ஒரு மாயவௌி. எந்த நேரமும் அத்துமீறி அடுத்தவர் நுழைவதற்கான ஆயிரம் ஓட்டைகள் அங்கே இருக்கும். எனவே உங்கள் தனிப்பட்ட தகவல்களை /  அந்தரங்கங்களை சேமித்து வைக்க இணைய வௌியில் நம்பிக்கை வைக்க வேண்டாம். குறிப்பாக பேஸ்புக்கை ஒருபோதும் நம்பவே வேண்டாம்.

அமெரிக்காவின் உளவுத்துறை சர்வதேச ரீதியாக உளவு பார்க்கும் வேலைகளை இலகுபடுத்தவே பேஸ்புக் உருவாக்கப்பட்டது என்ற கருத்தும் கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் பரவி பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube

One thought on “பேஸ்புக்கிலிருந்து ஐம்பது மில்லியன் பயனர்களின் விபரங்கள் திருட்டு”

Comments are closed.