மஹிந்த பக்கம் தாவ சிறுபான்மைக் கட்சிகள் தீர்மானம்?

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் விரைவில் மஹிந்த அணியுடன் சங்கமிக்கும் முடிவில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வௌியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் இந்த வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக்கட்சிகள் மட்டுமன்றி மேலும்  சில சிறிய கட்சிகளும் எதிர்வரும் நவம்பர் மாத வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது கட்சிகளின் யோசனை மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள போதிலும் அரசாங்க தரப்பில், அவற்றுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், அடுத்த சில தினங்களில் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் மற்றும் ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் ஆகிய தலைவர்கள் இது சம்பந்தமான பிரதான கட்சிகளுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக பேசப்படுகிறது.

எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இந்த கட்சிகளிடம் இருந்து உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube