ரயில்வே வேலைநிறுத்தம் முடிவு! சம்பளம் அதிகரிப்பு

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

புகையிரத திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் கடந்த ஐந்து நாட்களாக  முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை கைவிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில்  இன்று (12) காலை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது புகையிரத திணைக்கள ஊழியர்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, சரத் அமுனகம ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளை அடுத்து, தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்ததாக ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் பீ.எம்.பீ. பீரிஸ் கூறினார்.

இதற்கமைய, அனைத்து ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube