ராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகள் படுகொலை! முன்னாள் அமைச்சர்கள் பரபரப்பு

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய புலி அங்கத்தவர்கள் ராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

சுதந்திரக்கட்சியில் இருந்து பதவிகளை ராஜினாமாச் செய்த 15 பேர் அணியின் ஊடக சந்திப்பொன்றில் இந்தக் கருத்துக்கள் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க மற்றும்  டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த ஊடக சந்திப்பு தொடர்பான காணொளி தற்போது வௌியாகியுள்ளது

குறித்த காணொளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கருத்து வௌியிடும்போது தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகளின் கேணல் ரமேஷ் என் நெருங்கிய நண்பர். அவர் ராணுவத்தினரிடம் சரணடைய பத்துநிமிடம் முன்னதாக எனக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பியிருந்தார். பின்னர் அவர் கொல்லப்பட்டிருந்தார்.

இதே போன்று முக்கிய புலி அங்கத்தவர்கள் ஏராளம் பேர் சரணடைந்தனர். பலர் கொல்லப்பட்டனர். இந்த வரலாறு உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆனால் அதைப் பற்றிப் பேசிப் பிரயோசனமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினரை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் ராணுவத் தளபதியும் இந்நாள் அமைச்சருமான சரத் பொன்சேகாவை சிக்கலில் மாட்டி விடும் நோக்கிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான சில விடயங்களை கசிய விட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தரப்பும் தயாராகி வருவதாவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Facebooktwittergoogle_pluslinkedinrssyoutube