டொக்டர் ஆபியா சித்திக்கீ அமெரிக்கச் சிறையில் மரணம்?

டொக்டர் ஆபியா சித்தீக்கி அமெரிக்கச் சிறையில் உயிரிழந்துள்ளதாக ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத போதிலும் டொக்டர் ஆபியா சித்திக்கீ குறித்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டுள்ளோம். 1972 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிறந்த ஆபியா சித்தீக்கி திறமையான ஒரு […]

எரிந்து நாசமான ஹமீதியாஸ் களஞ்சியசாலை

இலங்கையின் பிரபல ஆடைக்களஞ்சியமான ஹமீதியாஸ் ஆடைக் காட்சியறைத் தொகுதியின் களஞ்சியசாலை தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. இரத்மலானை, பொருப்பனை பிரதேசத்தில் அமைந்திருந்த ஹமீதியாசின் பாரிய களஞ்சியத் தொகுதியே இவ்வாறு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. சனிக்கிழமை காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தீவிபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. மின் ஒழுக்கு காரணமாக […]

நீர் ஒரு வாய்ச்சவடால் பேர்வழி! ஜனாதிபதியைக் கலாய்த்த ஊடகப்பிரிவு

ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கின் பதிவொன்றுக்கு ”நீ ஒரு வாய்ச்சவடால் பேர்வழி மட்டுமே” என்பதாக அவரது ஊடகப்பிரிவின் ட்விட்டர் கணக்கு ஊடாக பதிலளிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த சுவாரஷ்ய சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையின் ஒருபகுதியை தனது […]

பொதுபல சேனா தொடர்பான செய்திக்காக செய்தி இணையத்தளம் முடக்கம்

பொதுபல சேனா அமைப்பு தொடர்பான செய்தியொன்றை வௌியிட்டமைக்காக எமது இணையத்தளம் இன்று காலை பல மணித்தியாலங்கள் வரை முடக்கப்பட்டிருந்தது. தமிழ்-முஸ்லிம் சிறுபான்மையரின் நியாயங்களை சிங்களத்தில் எழுதியும், சிங்களப் பேரினவாதிகளின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு சிங்களத்திலேயே பதிலடி கொடுக்கும் நோக்கிலும் கடந்த நான்கு வருடங்களாக நாம் எமது இணையத்தளத்தை சிங்கள மொழியை முதன்மைப்படுத்தி […]

யாழ் ஊடகவியலாளருக்கு உதவிய முஸ்லீம் பெண் ஊடகவியலாளர்

ரயில் ஊழியரின் இனத்துவேச கருத்துளினால்  யாழ்ப்பாணம் ஊடகவிலயாளருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை சமூக ஊடகம் வாயிலாக அறிந்த முஸ்லீம் பெண் ஊடகவியலாளர் கொழும்பு கோட்டை பிரதம புகையிரத அத்தியட்சகர்  ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ரயில் ஊழியர்  தற்காலிக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் […]

ரமழான் நெருங்கும் நிலையில் பொருட்களின் விலை அதிகரிப்பு

புத்தாண்டு மற்றும் வெசாக் தினங்களை முன்னிட்டு குறைக்கப்பட்ட பொருட்களின் விலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளில் தோல் நீக்காத பருப்புக்கு ஆறு ரூபாவும், சுத்திகரிக்கப்பட்ட பருப்புக்கு 09 […]

ஞானசார தேரருக்கு அமைச்சர்களுக்கு இணையான பாதுகாப்பு

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எல்லாளன்-துட்டகைமுனு போர் நடைபெற்ற நிலப்பரப்பிற்கு ஞானசார தேரர் நேற்று விஜயம் செய்துள்ளார். வரலாற்றுக் காலம் தொட்டு சிங்கள மக்கள் தமிழரின் மீதான போர் வெற்றியாக கொண்டாடும் சம்பவமாக எல்லாளன்-துட்டகைமுனு இருவருக்குமிடையே  நடைபெற்ற போர் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் இபலோகம பிரதேச செயலாளர் பிரிவில் […]

உலக ரீதியில் யாழ் தேவிக்கு கிடைத்த அங்கிகாரம்!

உலகின் மிகச் சிறந்த 18 தொடருந்து சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி தொடருந்துச் சேவையும் இடம்பெற்றுள்ளது. அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப் சேவைகள் பட்டியலை தி கார்டியன் (The Guardian) இணையதளம் வெளியிட்டுள்ளது. தொடருந்துப் பயணத்தின் போது பயணிகளின் மனதுக்கு […]

அபாயா பிரச்சினையை தூண்டிவிட்ட போலி அதிபர்

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்திடைந்து ஓய்வு பெற்ற பிறகும், ‘அதிபராக’ கடமையாற்றி வந்துள்ளதோடு, பாடசாலையின் பதிவுப் புத்தகத்திலும் ‘அதிபர்’ என சட்டவிரோதமாகக் கையெழுத்திட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. சண்முகா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலனின் சேவைக் […]

அபாயா பிரச்சினையின் பின்னால் இந்து மதவாதிகள்! அப்துல்லா மஹ்ரூப்

திருகோணமலை ஆசிரியர்களின் ஹபாயா  பிரச்சினையின் பின்னால்  இந்துத்துவ அடிப்படைவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும்  புலி சாயம் கொண்ட கட்சிகள் உள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் இது தொடர்பில் கலந்துரையாட   எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனை அழைத்தால்  எம்மை அவமதிக்கும் முறையில் நடந்து […]