ஞானசாரவின் காவியுடை களையப்பட்டு ஜம்பர் அணிவிப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் தற்போது ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் ஐந்தாம் இலக்க விடுதியில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ஆயுதம் தாங்கிய இரண்டு சிறைக்காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். […]

ரயில்வே வேலைநிறுத்தம் முடிவு! சம்பளம் அதிகரிப்பு

புகையிரத திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் கடந்த ஐந்து நாட்களாக  முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை கைவிடப்பட்டுள்ளது. பொலன்னறுவையில்  இன்று (12) காலை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது புகையிரத திணைக்கள ஊழியர்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களான மங்கள சமரவீர, […]

புதிய அரசியலமைப்பு வரைபு தமிழர்களுக்கு ஏமாற்றம்?

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் புதிய வரைபு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய இல்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே வேலைநிறுத்தம்! எரிபொருள், தபால் விநியோகங்களில் தடையில்லை

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தடைகளும் ஏற்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு மேலதிக பௌசர்களினூடாக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் எவ்வித தட்டுப்பாடும் இன்றி […]

ஓடும் ரயிலில் கிகி சேலஞ்ச்! தண்டனை வழங்கிய அதிகாரிகள்

ஓடும் ரயிலில் கிகி சேலஞ்ச் செய்த இளைஞர்களுக்கு ரயில்வே நடைமேடையை சுத்தப்படுத்த இந்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடும் கிகி சேலஞ்சை, மும்பையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஓடும் ரயிலில் செய்துள்ளனர்.‌ அந்த வீடியோவை யூடியூபில் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே 14 லட்சம் பேர் […]

கிளைபோசேட் பசளை நிறுவனம் 289 மில்லியன் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு

இரசாயன தயாரிப்பு நிறுவனமான மான்சாண்டோவின் (Monsanto) க்ளைபோசேட் என்ற இரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்த நபருக்கு 289 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களது பூச்சிக்கொல்லி தயாரிப்புகள் ஆபத்தானவை என தெரிந்தும் இது குறித்து மான்சாண்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு […]

10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம்

இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கான 10 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவிற்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகராக ஓஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நோர்வேக்கான புதிய தூதுவராக பேராசிரியர் அரூஷா குரேவும், பிரேசிலுக்கான தூதுவராக எம்.எம்.ஜஃபீரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனடாவிற்கான இலங்கை தூதுவராக எம்.ஏ.கே.கிரிஹாகமவும், […]

நாளை ஹஜ்ஜூப் பெருநாளை தீர்மானிக்கும் மாநாடு

துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நாளை (12) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெறவுள்ளது இதன் பிரகாரமே ஹஜ்ஜூப் பெருநாள் தீர்மானிக்கப்படவுள்ளது. உலகவாழ் முஸ்லிம்கள் துல் ஹஜ் 10 ஆம் நாள் ஈதுல் அல்ஹா எனப்படும் தியாகத்திருநாளான ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றமை […]

மேல் மாகாண சபைக்கு கதிரைகள் கொள்வனவு இடை நிறுத்தம்

மேல் மாகாண சபைக்கு 640,000 ரூபா பெறுமதியுடைய கதிரைகளை கொள்வனவு செய்யும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். தலா 6 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 125 கதிரைகளை பெல்ஜியமில் இருந்து கொள்வனவு செய்ய மேல் மாகாண சபை திட்டமிட்டிருந்தது. இந்த […]

பஸ் நடத்துனரின் கோடீஸ்வரக் காதல் நாடகம்! தப்பித்த யுவதி

பேஸ்புக் ஊடாக அறிமுகமான காதலனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த யுவதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி குறித்து சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் யுவதி ஒருவர் பேஸ்புக் ஊடாக இளைஞன் ஒருவரை தொடர்பு […]